4.8 C
New York
Monday, December 29, 2025

காணாமல்போன பெண் சடலமாக மீட்பு.

Silvaplana இல் மலையேற்றச் சென்ற பின் காணாமல் போன 57 வயதுடைய பெண் ஒருவர்,  செங்குத்தான நிலப்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வெள்ளிக் கிழமை காலை விடுமுறை இல்லத்திலிருந்து  மலையேற்றப் பாதை வழியாக சில்ஸ்/செகல் மரியாவை அடைவதற்காக தனியாகப் புறப்பட்டார்.

அந்தப் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும், அவரது வீட்டில் தேடியும் பலனளிக்காத நிலையில், உறவினர்களால் அவர் காணாமல் போனதாக முறையிடப்பட்டது.

Graubünden  கன்டோனல் பொலிசார் அன்று மாலையே பெரியளவிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சனிக்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன், கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரத்தில்  அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் நடவடிக்கையில்  பொலிசாருடன் SAC படைகள், மூன்று ரேகா ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டன.

Related Articles

Latest Articles