17.1 C
New York
Wednesday, September 10, 2025

ட்ரம்ப் வெற்றிபெற்றதால் சுவிஸ் SDP கட்சியில் புதிதாக குவியும் உறுப்பினர்கள்.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது,  சுவிட்சர்லாந்தில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சியில், நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று நாட்களில், சுமார் 1,000 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அந்தக் கட்சி கூறுகிறது.இது சாதனை எண்ணிக்கையாகும்.

இந்த வருகை  முற்றிலும் ஆச்சரியமளிக்கிறது,  சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இது, நாங்கள் முன்னேற்றங்களைக் அவதானிக்க முடிந்தது,” என்று கட்சியின் இணைத் தலைவர்  Cédric Wermuth  தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் சுவிட்சர்லாந்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்றும் அவர்  கூறினார்.

 மூலம் – swissinfo

Related Articles

Latest Articles