6.8 C
New York
Monday, December 29, 2025

அகதிகள் முகாமில் இருந்து நெடுந்தீவு வந்த மக்கள்!

இந்தியா, தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் ​நேற்று (09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர். 

நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் நேற்று மாலை வந்தடைந்தவர்கள் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

அதன் பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அனைவரும் மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் திருகோணமலை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு  மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள், 3 சிறார்கள் என 9 பேர் நேற்று காலை தமிழகத்தில் இருந்து புறப்பட்டு மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Latest Articles