7.1 C
New York
Monday, December 29, 2025

சமூக ஊடகங்களால் மன அழுத்தம் குறைவு.

சுவிட்சர்லாந்தில் உள்ள இளைஞர்கள், எதிர்பார்த்ததை விட சமூக ஊடகங்களால்  குறைவான அழுத்தத்தை உணர்கிறார்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சுவிஸ் இளைஞர்கள் பற்றிய Pro Juventute இன் முதல் ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் ஆண்களை விட அதிக மன அழுத்தத்தை உணர்கிறார்கள்என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சூரிச் பல்கலைக்கழக மனநல மருத்துவ மனையின் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநலத் துறையுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக Pro Juventute கூறுகிறது.

இந்த ஆய்வில் 14 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.

கணக்கெடுப்பில் பங்கேற்ற, 88% இளைஞர்கள் தாங்கள் மனதளவில் நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும் 94% பேர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும், 30% இளைஞர்கள் பெரும்பாலும் சோர்வாக உணர்கிறார்கள்.

பாடசாலை, பயிற்சி மற்றும் பரீட்சைகள் மிகப்பெரிய மன அழுத்த காரணிகளாக இவர்கள் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து செயற்பட வேண்டிய அழுத்தம், பணத்தைப் பற்றிய கவலைகள், அதிக எதிர்பார்ப்புகள் மற்றும் ஒருவரின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் என்பன அழுத்தங்களைக் கொடுப்பதாக கூறியுள்ளனர்.

ஆச்சரியப்படும் விதமாக, 15% பேர் மட்டுமே சமூக ஊடகங்களை ஒரு முக்கிய மன அழுத்த காரணியாக பார்க்கிறார்கள்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles