5.3 C
New York
Tuesday, December 30, 2025

கோடரி வெட்டில் ஒருவர் காயம் – இத்தாலியர் கைது.

சூரிச் மாவட்டம் 3 இல் உணவு ஊழியர் ஒருவரை கோடரியால் தாக்கிய இத்தாலியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்றுக்காலை 7 மணியளவில் காயமடைந்த 41 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

தனது சக ஊழியர் கோடரியால் தாக்கப்பட்டதாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு அவர் காயமடைந்தார் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக கன்டோனல் பொலிசார் கூறினர்.

இதையடுத்து,  பொலிசார் ஒரு பாரிய நடவடிக்கையில்  ஈடுபடுத்தப்பட்டு,   தப்பியோடிய சந்தேக நபரான 45 வயது இத்தாலியரைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற சூழல் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், தடயவியல் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சூரிச் காவல்துறை தெரிவித்துள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles