Thurgau கன்டோனில் உள்ள Güttingen இல் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
24 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற கார், Vogelsang அருகில், வலது பக்க வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, கார் எதிரே வந்த பாதையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
- Advertisement -

இந்தச் சம்பவத்தில் இரண்டு கார்களின் சாரதிகளும் காயம் அடைந்தனர்.
51 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற காரில் இருந்த 10 தொடக்கம் 14 வயது வரையுடைய 3 சிறுமிகளும் காயம் அடைந்தனர்.
குறித்த காரின் சாரதி, வாகனத்தில் சிக்கியிருந்த நிலையில் தீயணைப்பு பிரிவினரால் மீட்கப்பட்டார்.
மூலம் – 20min


