16.5 C
New York
Monday, September 28, 2026

கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது.

Thurgau கன்டோனில் உள்ள  Güttingen இல் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

24 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற கார், Vogelsang  அருகில், வலது பக்க வளைவில் கட்டுப்பாட்டை இழந்து,  கார் எதிரே வந்த பாதையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் இரண்டு கார்களின் சாரதிகளும் காயம் அடைந்தனர்.

51 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற காரில் இருந்த  10 தொடக்கம் 14 வயது வரையுடைய 3 சிறுமிகளும் காயம் அடைந்தனர்.

குறித்த காரின் சாரதி, வாகனத்தில் சிக்கியிருந்த நிலையில் தீயணைப்பு பிரிவினரால் மீட்கப்பட்டார்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles