21.6 C
New York
Wednesday, September 10, 2025

அதிவேகமாக காரை செலுத்திய பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை.

சூரிச்சில் அதிவேகமாக காரைச் செலுத்தி திரும்பத் திரும்ப குற்றமிழைத்த 23 வயதுப் பெண்ணுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

80 கிலோ மீற்றர் வேக வரம்பு விதிக்கப்பட்டுள்ள ஏ3 நெடுஞ்சாலையில் 220 கிலோ மீற்றர் வேகத்தில்  பலமுறை வாகனத்தைச் செலுத்தியதாக இந்தப் பெண் மீது குற்றம்சாட்டப்பட்டது.

பலமுறை அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவரை 6 மாதங்கள் கட்டாயமாக சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

அத்துடன், மேலும் 30 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. குறித்த காலத்தில் மீண்டும் இதே தவறை செய்தால் அந்தக் காலப்பகுதியை சிறையில் கழிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

அதேவேளை இவருடன் கூடப் பயணித்த படம் பிடித்த ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பேருக்கும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மூலம் – 20min

Related Articles

Latest Articles