16.9 C
New York
Thursday, September 11, 2025

இஸ்ரேலுக்கான விமான சேவை இடைநிறுத்தம் நீடிப்பு.

சுவிஸ் விமான நிறுவனத்தை உள்ளடக்கிய லுப்தான்சா குழுமம் இஸ்ரேலுக்கான விமானசேவை தடையை நீடித்துள்ளது.

பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக டெல்அவிவ் பென் குரியன் விமான நிலையத்திற்கான விமான சேவைகளை டிசெம்பர் 15ஆம் திகதி வரை இடைநிறுத்தி வைப்பதாக லுப்தான்சா குழுமம் நேற்று அறிவித்துள்ளது.

Lufthansa, Austrian, SWISS மற்றும் Brussels விமான சேவைகள் இதில் அடங்கியுள்ளதாக லுப்தான்சா குழுமம் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கான விமான சேவை 2025 ஜனவரி 31ஆம் திகதி வரையிலும், லெபனானின் பெய்ரூட்டுக்கான விமான சேவை 2025 பெப்ரவரி 28ஆம் திகதி வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், லுப்தான்சா குழுமம் தெரிவித்துள்ளது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles