1.9 C
New York
Thursday, February 12, 2026

சூரிச் ரயில் நிலையத்தில் கத்திக் குத்து.

சூரிச் ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மற்றொரு இளைஞனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் பரப்பு மிக்க ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயதுடைய ஆப்கானிஸ்தான் நாட்டு இளைஞனே 25 வயதுடைய ஆப்கானிஸ்தான் இளைஞனை தாக்கியுள்ளார்.

தலையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய இளைஞன், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles