2.1 C
New York
Thursday, February 12, 2026

மட்டக்களப்பில் 2.5 கோடி ரூபாவை பறிகொடுத்த சுவிஸ் பெண்.

மட்டக்களப்பு – கல்லடியில், தங்கியிருந்த சுவிஸ் பிரஜையான பெண்ணைத் தாக்கி, இரண்டரைக் கோடி ரூபா வரையான பணமும், நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி பேபிசிங்கம் வீதியில் அமைந்துள்ள வீடு  ஒன்றில் நேற்று  அதிகாலை  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளியலறை ஜன்னல் கதவை உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்து அலுமாரியை உடைத்து 72 ஆயிரம் சுவிஸ் பிராங் மற்றும் ஒன்றேகால் பவுண் தங்கச் சங்கிலி,  29  ஆயிரம் ரூபா இலங்கை நாணயம் ஆகியவற்றை  கொள்ளையிட்டு சென்றுள்ளனர் .

வீட்டில் தனித்து தங்கி இருந்த 62 வயதுடைய சுப்பையா பிள்ளை கோணேஸ்வரி என்ற பெண்ணைத்  தாக்கி விட்டு, இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

கணவனும் மகளும் சுவிசில் வசிக்கின்ற நிலையில் குறித்த பெண் தனது வீட்டை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வந்து, தங்கியிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சுவிஸ் சென்ற, இவரது கணவன் பொறியலாளராகவும், மகள் விஞ்ஞானியாகவும் சுவிசில் பணியாற்றுகின்றனர்.

குறித்த பெண் சுவிசில் தாதியாக பணிபுரிந்து  ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கைக்குத் திரும்பி தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் மற்றும் தடயவியல் சொகோ  பொலிஸ் பிரிவினர் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles