-9.5 C
New York
Monday, December 23, 2024

சுவிஸ் கார் விபத்தில் உயிரிழந்தவர் யாழ். இளைஞன்.

Valais கன்டோனில் உள்ள Leuk இல் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கேசவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sierre இல் இருந்து Susten நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், காரின் சாரதியான 27 வயதுடைய இலங்கையர் அந்த இடத்திலேயே மரணமானார் என Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்த விபத்தை அடுத்து மேலும் இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து இடம்பெற்றதற்கான காரணம் இன்னமும் தெளிவாகாத நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மூலம் –bluewin

Related Articles

Latest Articles