பேர்ண் கன்டோனில் உள்ள நான்கு பெட்ரோல் நிலையங்கள் மீது ஒரே இரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
பலஸ்தீன ஆதரவுக் குழுவினரே இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பான படங்களை வெளியிட்டு அவர்கள், மேலும் தாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
காசாவில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு எரிபொருள் வழங்குவதாக BP மற்றும் Socar நிறுவனங்களின் மீது இன்டாகிராம் பதிவில் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.