Rupperswil மற்றும் Aarau இடையிலான ரயில் போக்குவரத்து நேற்று மாலை தடைப்பட்டது.
இந்த நிலை நேற்று இரவு வரை நீடித்ததாக SBB தெரிவித்துள்ளது.
TGV, ICE, NJ, IC, IC1, IC3, IC5, IC8, IC81, IR, IR16, IR37, RE12, RE37, S11, S23, S26 and S29 ஆகிய லைன்களில் ரயில்கள் ரத்து, தாமதம், பாதை திருப்பி விடல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் நிலை மின்வழித்தடத்தில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் ஒரு SBB ரயில் சேதமடைந்துள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலின் யன்னல் கண்ணாடி நொருங்கியிருப்பதை காட்டும் படங்கள் வெளியாகியுள்ளதுடன், திட்டமிடப்படாத இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
பயணிகள் மாற்றுப் பேருந்துகளை பயன்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.