15.8 C
New York
Thursday, September 11, 2025

காசா இனப்படுகொலையை தடுக்கக் கோரி ஜெனிவாவில் பேரணி

காசாவில் நடக்கும் இனப்படுகொலையை தடுக்கக் கோரி ஜெனிவாவில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கான பலஸ்தீன ஆதரவாளர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

லெபனானில் இஸ்ரேலிய குண்டு தாக்குதல்களைக் கண்டித்த அவர்கள், இதற்கு இஸ்ரேல் தண்டிக்கப்படாமல் இருப்பதையும் அவர்கள் விமர்சித்தனர்.

பலஸ்தீனிய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், காசாவில் மனிதாபிமான வழித்தடத்தைத் திறக்க வேண்டும், போர்நிறுத்தம் செய்ய வேண்டும், இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தடையை கொண்டு வர வேண்டும், யூத அரசுடனான பொருளாதார ஒத்துழைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மற்றும் சர்வதேச அமைப்புகளில் இருந்து இஸ்ரேல் விலக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயத்தில் சுவிஸ் அதிகாரிகள் அமைதியாக இருப்பது குறித்தும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

மூலம்-watson.ch

Related Articles

Latest Articles