4.8 C
New York
Monday, December 29, 2025

பதவியை மறுக்கும் கிராம மக்களுக்கு 5,000 பிராங் அபராதம்.

கன்டோனில் உள்ள மலை கிராமமான Wassen இல் இன்று இரண்டு புதிய  நகரசபை  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால் யாரும் இந்தப் பதவிகளை ஏற்க விரும்பவில்லை.

Uri யில், ஒரு கட்டாய பதவிக்காலம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியை ஏற்க வேண்டும் அல்லது 5,000 பிராங்குகள் அபராதம் செலுத்த வேண்டும்.

இதனால் கிராமத்தில் உள்ள பிரபலங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

செப்ரெம்பரில் நடந்த முதல் சுற்று வாக்கெடுப்பில், யாரும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. அதனால் இன்று இரண்டாவது சுற்றில் தனிப் பெரும்பான்மை பெறுவது போதுமானதாக இருக்கும்.

Uriயில் இதுவரை அரசியல் பதவிகளை வகிக்காத 65 வயதுக்குட்பட்டவர்கள் தேர்தலை சந்திக்க  வேண்டும்.

அவ்வாறு செய்யாதவர்கள் 5,000 பிராங்குகள் அபராதம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles