4.8 C
New York
Monday, December 29, 2025

குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை தாக்கி காயப்படுத்தியவர் கைது.

Schaffhausen இல் இன்று காலை இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை உடல் ரீதியாகத் தாக்கி காயப்படுத்திய  ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

இன்று 9:40 மணியளவில், Schaffhausen நகரத்தில் Hochstrasse இல் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில்,  காரணமின்றி ஒரு ஆண் ஒரு பெண்ணை உடல் ரீதியாக தாக்கியதாக Schaffhausen பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அவரைத் தடுக்க முயன்ற போது, 25 வயதுடைய அந்த நபர் Finsterwaldstrasse வழியாக தப்பிச் சென்றுள்ளார்.

அங்கு அவர் இரண்டு குழந்தைகளையும் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் குழந்தைகள் காயமடைந்து அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறிது நேரம் கழித்து அந்த நபரை  பொலிசார் கைது செய்தனர்.

watson.ch

Related Articles

Latest Articles