18.7 C
New York
Sunday, May 17, 2026

விபத்தில் பெண் பலி.

Vaud  கன்டோனில் சனிக்கிழமை இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

A-1 நெடுஞ்சாலையின் அவசரகால பாதையில், Ecublens மற்றும் Morges இடையே இந்த விபத்து இடம்பெற்றது.

28 வயதுடைய  ஜெனிவாவைச் சேர்ந்த சுவிஸ் பெண் தனது  காரை அவசர கால பாதையில் நிறுத்த முயன்ற போது, மற்றொரு கார் மோதியுள்ளது.

மோதிய காரை 19 வயதுடைய சுவிஸ் இளைஞன் ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.இந்த விபத்தில் அவருக்கு காயங்கள் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் காயமடைந்த 28 வயதுடைய பெண்ணுக்கு உடனடியாக உயிர்காப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும், அந்த இடத்திலேயே மரணமானார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles