25.8 C
New York
Wednesday, June 25, 2025

சுவிசில் 2023 இல் 7 இலட்சம் பேர் இடம்பெயர்வு.

சுவிட்சர்லாந்தில், 2023ஆம் ஆண்டு, 9.3 வீதமான மக்கள் தமது  இடம்பெயர்ந்துள்ளனர்.

இது கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்த வீதமாகும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச இடம்பெயர்வு அதிகரித்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்திற்குள் இடமாற்றங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.

FSO இன் தரவுகளின் படி, 2023 இல் சுமார் 695,000 பேர் சுவிட்சர்லாந்திற்குள் குடிபெயர்ந்துள்ளனர்.

2020 இல்  இந்த எண்ணிக்கை, 769,000 ஆக இருந்தது.

2023 இல் இடம்பெயர்ந்த கிட்டத்தட்ட முக்கால்வாசி மக்கள் அதே கன்டோனில் தங்கியுள்ளனர்.

37% பேர் அதே நகராட்சிக்குள் இடம்பெயர்ந்தனர் மற்றும் 35% பேர் அதே கன்டோனில் உள்ள மற்றொரு நகராட்சிக்கு மாறினர்.

16% பேர் மற்றொரு கன்டோனுக்கும், 12% பேர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

Basel City  (11.9%) மற்றும் Neuchâtel (10.7%) ஆகிய கன்டோன்களில் அதிகளவில் இடமாற்றங்கள் காணப்பட்டன.

மாறாக, இது Appenzell Inner Rhodes (6.9%) மற்றும் Uri (7.3%) கன்டோன்களில் மிகக் குறைவாக இருந்தது.

பெரிய சுவிஸ் நகரங்களில், St Gallen  (14.1%) மற்றும் Bern (13.1%) ஆகியவை அதிக இடமாற்ற வீதங்களைப் பதிவு செய்துள்ளன.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles