ஜூலியஸ் சீசரைக் கொலை செய்த புரூட்டஸின் உருவப்படத்துடன் கூடிய, மிகவும் அரிதான ரோமானிய நாணயம், 1.84 மில்லியன் பிராங்குகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இந்த நாணயம் 8 கிராம் தங்கத்தினால் ஆனது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் நேற்று நடந்த ஏலத்தில் எட்டு பிரதான இணையவழி கொள்வனவாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருந்ததாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
742,000 பிராங் விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த நாணயம் கடும் போட்டியினால், 1.84 மில்லியன் பிராங்குகளுக்கு ஐரோப்பிய சேகரிப்பாளர் ஒருவரினால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin