சூரிச்சின் Oberrieden நகரசபை இடுகாட்டில் பூக்கள், அலங்காரப் பொருட்கள் திருட்டு அதிகரித்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் இடுகாட்டில் புதைக்கப்பட்டவர்களின் சமாதிகளில் வைக்கப்படும் பூக்கள், மற்றும் அலங்காரங்கள் திருடப்படுவது, குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
3 மாதங்களில் இவ்வாறான 30 முறைப்பாடுகள் வரை கிடைத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் திருடர்களை கட்டுப்படுத்த நகரசபையினால் இடுகாட்டில் சிசிடிவி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மூலம்- bluewin