சுவிட்சர்லாந்தில் மின்னணு அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்கனவே இந்த திட்டத்தை அங்கீகரித்துள்ளன.
தேவையான இ-ஐடி அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டிற்காக மொத்தம் 100 மில்லியன் பிராங் தேவைப்படும்.
மின்னணு அடையாள அட்டை 2026 இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த சர்ச்சையை செனட் தீர்த்து வைத்துள்ளது.