18.2 C
New York
Thursday, September 11, 2025

ஆயுதமுனையில் அச்சுறுத்தியவரை கைது செய்ய பாரிய பொலிஸ் நடவடிக்கை.

சூரிச்சில், Hüntwangen  இல் உள்ள Dorfstrasse இல் தனது குடும்பத்தினரை ஆயுத முனையில் அச்சுறுத்திய ஒருவரைக் கைது செய்வதற்கு பாரிய பொலிஸ் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது.

அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தமது குடும்பத்தினரை அச்சுறுத்தல் விடுத்த அந்த நபரைக் கைது செய்வதற்கு,  ஆயுதம் தாங்கிய பொலிசாருடன் 8 பொலிஸ் வாகனங்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

தீயணைப்பு பிரிவின் தொண்டர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்றுமாலை 4 மணியளவில் ஆயுதம் தாங்கிய அந்த மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அந்தப் பகுதியில் மீண்டும் வழமை நிலை ஏற்பட்டது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles