16.9 C
New York
Thursday, September 11, 2025

பாடசாலை அதிபரைத் தாக்கிய மாணவன் கைது.

ஜெனிவா, Petit-Lancy  இல் பாடசாலை நிர்வாகத்தின் உறுப்பினர்களை வாய்மொழியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கிய  மாணவன் ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவனால் தாக்கப்பட்டவர்களில் பாடசாலை அதிபரும் அடங்கியுள்ளார்.

இந்த தாக்குதலை பொது கல்வி, பயிற்சி மற்றும் இளைஞர் அமைச்சு உறுதி செய்துள்ளது.

சம்பவத்திற்கு முன்னர் மாணவர் அறிவுறுத்தல்களை புறக்கணித்ததாகவும், அதன் விளைவாக விமர்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

14 வயதுடைய மாணவன் பாடசாலை அதிபரை வாய்மொழியாக தாக்கி பல தடவைகள் தாக்கினார் என சம்பவத்தை நேரில் பார்த்த மாணவன் ஒருவரின் தந்தை வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

“நிலைமையை அமைதிப்படுத்த தலையிட்ட மற்றொரு ஊழியர் இதேபோல் தாக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸ்  அதிகாரிகள் மாணவனை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles