14 C
New York
Friday, May 15, 2026

ஒரு வருடத்தின் பின் இயங்க தொடங்கிய ரயில் நிலையம்.

சூரிச் Wipkingen நிலையத்தில் இன்று முதல் மீண்டும் ரயில்கள் நின்று செல்லும் என SBB அறிவித்துள்ளது.

இங்கு நெடுந்தூர ரயில்களும் மீண்டும் நின்று செல்லும்.

நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் , Wipkingenவாய்க்கால் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணிகள் காரணமாக சூரிச் மெயின் ஸ்டேஷன் மற்றும் சூரிச்  Wipkingen இடையேயான பாதை, டிசம்பர் 10, 2023 முதல் டிசம்பர் 14, 2024 வரை  மூடப்பட்டது.

திட்டமிட்டபடி பணிகள் முடிந்துள்ளதால், வழக்கமான சேவைகள் இடம்பெறும்.

S24 மீண்டும் Zug இலிருந்து சூரிச் HB மற்றும் விமான நிலையம் வழியாக Weinfelden/Thayngen வரை தொடர்ந்து இயங்கும் என்று SBB தெரிவித்துள்ளது.

ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர், இந்த நிலையத்தின் ஊடாக வழக்கமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

மூலம்-watson.ch

Related Articles

Latest Articles