15.6 C
New York
Friday, April 24, 2026

AI  இன்னும் தேர்தல் முடிவுகளில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

செயற்கை நுண்ணறிவு (AI)  இன்னும் தேர்தல் முடிவுகளில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என, சுவிட்சர்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 100 நாடுகளில் நடந்த தேர்தல்களை ஆய்வு செய்த பின்னர் அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், செயற்கை நுண்ணறிவு மூலம் கையாளப்பட்ட உள்ளடக்கத்தின் பரவலானது அரசியல் கருத்தை மேலும் பிளவுபடுத்தியுள்ளது. மற்றும் அவநம்பிக்கையின் சூழலை உருவாக்கியுள்ளது என்று சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஒவ் ரெக்னோலஜி லொசேன் (EPFL) செவ்வாயன்று வெளியிட்ட  அறிக்கையில் கூறியுள்ளது.

குறிப்பாக, deepfakes எனப்படும் AI- கையாளப்பட்ட வீடியோக்கள் பல நாடுகளில் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் 2023 தேர்தல்களின் போது,  பாராளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரியாஸ் கிளார்னர் தனது அரசியல் போட்டியாளரான சிபெல் அர்ஸ்லானின் deepfakes வீடியோவை உருவாக்கியமை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

மற்றொரு உதாரணம், டொனால்ட் டிரம்ப் தன்னைப் பற்றிய அனைத்து எதிர்மறையான அறிக்கைகளும்  deepfakes என்று மீண்டும் மீண்டும் கூறுவதாகும்.

இந்தியாவில், 2024 தேர்தலின் போது, ​​பொலிவுட் நடிகர் அமீர் கானின் deepfakes வீடியோ, அரசியல் கட்சிக்கு அவர் அளித்த ஆதரவை பொய்யாகக் காட்டுகிறது.

இந்தோனேசியாவில், இறந்த அரசியல்வாதி ஒருவர் வாக்காளர்களிடம் பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles