26.4 C
New York
Thursday, August 20, 2026

1992ல் காணாமல்போன இரண்டு மலையேறிகளின் உடல்கள் கண்டுபிடிப்பு.

1992-ல் காணாமல்போன இரண்டு பெல்ஜிய மலையேறுபவர்களின் உடல்கள், சுவிட்சர்லாந்தில் உருகி வரும் டிரிஃப்ட் பனிப்பாறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வாலைஸ் மாகாணத்தில் உள்ள சாஸ்-க்ரண்ட் நகராட்சியில் ஜூலை 26 அன்று இந்த எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு மீட்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு, அடையாளம் காண்பதற்காக சியோனில் உள்ள வாலைஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.

“டிஎன்ஏ ஆய்வுகளில் இந்த உடல்கள் 1992 முதல் வைஸ்மீஸ் பகுதியில் காணாமல் போன இரண்டு மலையேறுபவர்களுடையவை என்பர் உறுதி செய்யப்பட்டுள்ளது, என்று வாலைஸ் மாகாண காவல்துறை அறிவித்தது.

செப்டம்பர் 4, 1992 அன்று, அந்த இருவரும் வைஸ்மீஸ் (4,017 மீட்டர்) சிகரத்தை ஏறும் நோக்கத்தில் வைஸ்மீஸ் குடிசையிலிருந்து புறப்பட்டு, அல்மஜெல் குடிசை வரை சென்றனர். மோசமான வானிலையில் சிக்கிக்கொண்டதால், அவர்கள் தங்கள் இலக்கை அடையவே இல்லை.

அதைத் தொடர்ந்த மாதங்களில், பல தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக ஒரு முதுகுப்பை கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் மலையேறுபவர்கள் கிடைக்கவில்லை.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles