ஜேர்மனியின் கிழக்குப் பகுதி நகரான Magdeburg இல் கிறிஸ்மஸ் சந்தைக் கூட்டத்திற்குள் வேகமாக காரை செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் குழந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இந்த தாக்குதலை நடத்திய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
பண்டிகைக்கால கொள்வனவுகளுக்காக வந்திருந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து ஜேர்மனியின் ஏனைய பல நகரங்களில் கிறிஸ்மஸ் சந்தைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
8 ஆண்டுகளுக்கு முன்னர் 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி, இஸ்லாமிய தீவிரவாதி ஒருவர் லொறி ஒன்றைக் கடத்தி பெர்லின் கிறிஸ்மஸ் சந்தைக்குள் செலுத்தி நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்- apnews