-10.3 C
New York
Monday, December 23, 2024

ஜேர்மனி தாக்குதலில் 200 பேருக்கு காயம்- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு.

ஜேர்மனியின் Magdeburg  கிறிஸ்மஸ் சந்தையில் கார் ஒன்றின் மூலம் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 200 ஆக அதிகரித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 41 பேரின் நிலை ஆபத்தாக இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த சந்தைப் பகுதி மூடப்பட்டுள்ளது.

அதன் அருகே பெருமளவு மக்கள் மலர்ச் செண்டுகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கார் சாரதியிடம் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles