கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று நண்பகலுக்கு முன்னதாக, Amsteg மற்றும் Gotthard வீதி சுரங்கப்பாதைக்கு இடையிலான போக்குவரத்தை Uri கன்டோனல் பொலிசார் இடைநிறுத்தியுள்ளனர்.
இதனால் பனி அகற்றும் வாகனங்கள் சுதந்திரமாக செல்லக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தடை தற்காலிகமானது தான் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மத்திய பகுதிகளில் 75 மணி நேரத்திற்குள் 125 சென்டிமீட்டர் வரை பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலைத் தகவல்கள் கூறுகின்றன.
மூலம்- swissinfo