சுவிஸ் கிறிஸ்மஸ் சந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் Magdeburg கிறிஸ்மஸ் சந்தைக்குள் நேற்று முன்தினம் இரவு பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வேகமாகச் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஜேர்மனியில் வசித்து வந்த மருத்துவர் ஒருவரே ஈடுபட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தனி ஒருவராகவே செயற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சுவிஸ் கிறிஸ்மஸ் சந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான சம்பந்தப்பட்ட நிபுணர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
சுவிஸ் கிறிஸ்மஸ் சந்தைகள் போதுமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மூலம்- 20min