ஐரோப்பாவில் செலவு மிக்க நாடாக சுவிட்சர்லாந்து விளங்குகிறது.
இங்கு ஒரு ஷொப்பிங் கூடையின் விலை, ஐரோப்பிய ஒன்றிய சராசரியை விட, கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு ஷொப்பிங் கூடை 100 யூரோவாக இருந்தால் சுவிட்சர்லாந்தில் அது 154 பிராங்குகளாக உள்ளது.
ஐஸ்லாந்தை விட சுவிட்சர்லாந்து அதிக விலைவாசியைக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைத் தவிர, நோர்டிக் நாடுகள் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய சராசரியை விட விலைவாசி அதிகமானவையாக உள்ளன.
உணவு, உடை மற்றும் போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஷொப்பிங் கூடை, அண்டை நாடுகளின் சராசரியை விட அதிகமாக உள்ளது.
இது ஜேர்மனியில் 112 யூரோக்கள், பிரான்சில் 109 யூரோக்கள் மற்றும் ஒஸ்திரியாவில் 113 யூரோக்களாக உள்ளது.
அண்டை நாடுகளில், இத்தாலி மட்டுமே சராசரியாக 96 யூரோக்கள் என குறைவாக உள்ளது.
துருக்கி, வடக்கு மசிடோனியா மற்றும் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் விலை நிலை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
மூலம்- 20min