அல்பேனியாவில் சர்ச்சைக்குரிய சமூக ஊடகமான டிக் டொக்கிற்கு தடை விதிக்கவுள்ளது.
சீனாவின் இந்த சமூக ஊடகத் தளத்தை குறைந்தது ஒரு வருடத்திற்குள் மூட வேண்டும் என பிரதமர் எடி ராமா உத்தரவிட்டுள்ளார்.
தகுந்த தொழில்நுட்ப தயாரிப்புகளுக்குப் பின்னர், 6 முதல் 8 வாரங்களில் அல்பேனியாவில் டிக் டொக் தளத்தை அணுக முடியாது என்று அவர் கூறினார்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தில் வைக்கப்பட்டு பணயக் கைதிகள் ஆக்கப்படுகிறார்கள் என்று, பிரதமர் ராமா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உளவியலாளர்களுடனான சந்திப்பில் கூறினார்.
“டிக்டாக் அக்கம் பக்கத்திலுள்ள வஞ்சகர். இந்த வஞ்சகனை ஒரு வருடத்திற்கு விரட்டியடிப்போம்.”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்- 20min