Semsales இல் நேற்றுக்காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை, 8 மணியளவில், 39 வயதுடைய வாகன ஓட்டி ஒருவர், சாட்டல்-சென்-டெனிஸிலிருந்து புல்லே நோக்கி A12 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
Semsales இல் ஈரமான வீதி காரணமாக அவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதினார்.
இதன் தாக்கத்தால் இரண்டாவது வாகனம் பாதையை விலகி வயல்வெளியில் குப்புறக் கவிழ்ந்தது.
அதன் 46 வயதான சாரதி காயமடைந்து அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதல் வாகனம் அதே வீதியில் 100 மீட்டர் தொலைவில் நின்றது.
அதன் சாரதி மற்றும் 25 வயது பயணி ஆகியோர் காயமடைந்து அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் நெடுஞ்சாலையின் வலதுபுறம் 1.5 மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
மூலம்- polizeinews