16.9 C
New York
Thursday, September 11, 2025

கத்திக்குத்தில் 69 வயது ஆண் பலி- 34 வயது பெண் கைது.

Henau இல், வீடு ஒன்றில் ஏற்பட்ட முரண்பாட்டில், ஆண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல், Henau இல், உள்ள Blumenstrasse இல் உள்ள வீடு ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக St. Gallen  பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் 69 வயதான சுவிஸ் ஆண் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்றும், கத்திக்குத்து இடம்பெற்ற சரியான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக,  34 வயதுடைய  ஹங்கேரிய பெண்  கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய தகவலின்படி, இருவரும் இறந்தவரின் குடும்ப வீட்டில் இருந்தனர்.

இரண்டு நபர்களுக்கு இடையிலான உறவு தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகிறது.

மூலம்-  20min.

Related Articles

Latest Articles