Biel இல் உள்ள ஐஸ் ஹொக்கி ரசிகர்களை பேர்ன் கன்டோனல் பொலிசார், கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி கலைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை, EHC Biel மற்றும் SC பேர்ன் ஐஸ் ஹாக்கி கழகங்களின் ஆதரவாளர்கள் மோதிக் கொள்வதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரசிகர்கள் பீல் ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் பட்டாசுகள் மற்றும் பைரோடெக்னிக்குகளை வெடித்தனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
போட்டிக்கு பிறகு, இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே வாய்மொழி ஆத்திரமூட்டல்கள் மற்றும் மோதல்கள் மைதானத்திற்கு வெளியே வெடித்தன.
பொலிசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி கூறியும் பலன் கிடைக்காத நிலையில் இரு குழுக்களுக்கிடையில் நேரடி மோதலைத் தடுக்க, கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் ரப்பர் தோட்டாக்களும் பயன்படுத்தப்பட்டன.
மூலம்- Swissinfo