-0.7 C
New York
Tuesday, December 30, 2025

சுவிஸ் ஒலிம்பிக் ஸ்னோபோர்ட் வீராங்கனை பனிச்சரிவில் மரணம்.

சுவிசில் தேசிய ஸ்னோபோர்ட் குறொஸ் அணியின் வீராங்கனையான, சோஃபி ஹெடிகர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

சுவிஸ்-ஸ்கை கூட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை  அரோசாவில் அவர் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் உயிழந்த வீராங்கனை சோஃபி ஹெடிகருக்கு 26 வயதாகும்.

2022 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் ஸ்னோபோர்ட் குறொஸ் மற்றும் கலப்பு அணி ஸ்னோபோர்ட் குறொஸ் போட்டிகளில் இவர் பங்கேற்றிருந்தார்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles