உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம், இத்தாலிய நகரமான குபியோவில் அமைக்கப்பட்டுள்ளது.
750 மீட்டர் உயரம் கொண்ட இந்த கிறிஸ்மஸ் மரத்தை 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் தெளிவாகப் பார்க்க முடியும்.
1991 ஆம் ஆண்டு முதல் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்து வருகிறது.
இந்த ஆண்டு, நீலம், சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்மஸ் மரத்தில், டிசம்பர் 7 ஆம் திகதி முதல் ஜனவரி 6 ஆம் திகதி வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை விளக்குகள் ஒளிரும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள 3,000க்கும் மேற்பட்ட வண்ணமயமான LED விளக்குகளுக்கான மின்சாரம் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைத்து வருகிறது.
மூலம்- 20min.