பெர்னில் உள்ள பிராந்திய சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்ட சிறைக் கைதி மருத்துவமனையில் உயிரிந்துள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை மாலை உயிரிழந்தார் என கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2024 டிசம்பர் 19, மதியம் 12:10 மணிக்குப் பிறகு, பெர்னில் உள்ள பிராந்திய சிறையில் உள்ள ஒரு சிறைக் கைதி ஆபத்தான நிலையில் காணப்பட்டதாக பெர்ன் கன்டோனல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவசர சேவைகள் வரும் வரை, கைதிக்கு மூன்றாம் நபர்களால் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
உயிரிழந்தவர் 39 வயதுடைய சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
மரணத்திற்கான சரியான காரணத்தை பெர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள தடயவியல் மருத்துவ நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
Bern-Mittelland பிராந்திய சட்டமா அதிபர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், பெர்ன் கன்டோனல் பொலிசார் மரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூலம்- polizeinews

