தெற்கு நோக்கிய Gotthard சுரங்கப் பாதையின் வடக்கு நுழைவாயிலின் முன்பாக நேற்று பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
நேற்று மதியம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
இதனால், வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது.
பண்டிகைக்கால விடுமுறைகளால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனைச் சமாளிக்க மேலதிக ரயில்கள் இயக்கப்படுவதாக SBB தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo.