அசர்பைஜான் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, அசர்பைஜான் ஜனாதிபதியிடம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ரஷ்ய வான்வெளியில் சுட்டப்பட்ட விமானம், கசகஸ்தானில் விழுந்து நொருங்கியதில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறாமல் புடின் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரேனிய ட்ரோன்களை தீவிரமாக விரட்டியபோது இந்தச் சோக சம்பவம் நிகழ்ந்ததாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
செச்சினியாவில் தரையிறங்க முயன்றபோது ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளால் விமானம் தாக்கப்பட்டது – அது கஸ்பியன் கடலின் குறுக்கே திருப்பி விடப்பட்டது.