Valais கன்டோனில் உள்ள Arolla வில் பனிச்சரிவில் சிக்கிய 27 வயதான ஸ்கை சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பனிச்சரிவில் சிக்கிய அவரை மீட்புப் பணியாளர்கள் விரைவாகக் கண்டுபிடித்து, மீட்டனர்.
எனினும் அவர் Sion மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருடன் சென்றவர்கள் எவரும் இந்த பனிச்சரிவில் பாதிக்கப்படவில்லை.
மூலம் -20 min.