சூரிச்சில், ZVV பிராந்திய பேருந்துகளில் டிக்கெட் விற்பனை இந்த ஆண்டின் இறுதியுடன் நிறுத்தப்படுகிறது.
சுமார் 75 சதவீத மக்கள் தங்கள் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் வாங்குகிறார்கள் என்பதாலும், டிக்கெட் விற்பனை இயந்திரங்களின் சேவைக்காலம் முடிவை எட்டியுள்ளதாவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செயலி இல்லாதவர்கள், அலைபேசி மூலம் டிக்கெட்டை வாங்கலாம் என்றும், சில சந்தர்ப்பங்களில், அவர்கள் இரண்டு மடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் வயோதிபர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மூலம் -20 min.