19.8 C
New York
Thursday, September 11, 2025

8 இலட்சம் மின்சாரக் கார்களின் இருப்பிடத் தரவுகள் கசிவு.

வொக்ஸ் வகன் நிறுவனத்தின் சுமார் 8 இலட்சம் மின்சார கார்களின் இயக்கம் பற்றிய தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வொக்ஸ் வகன் நிறுவனத்தின் இன் மென்பொருள் துணை நிறுவனமான Cariad இல் வெளிப்படையாக தரவு கசிவு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள 800,000  மின்சார  கார்களின் இயக்கத் தரவு மற்றும் உரிமையாளர்களுக்கான தொடர்புத் தகவல்கள் இணையத்தில் பாதுகாப்பற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 22,000 வாகனங்கள் சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மென்பொருள் தவறின் காரணமாக, VW, Seat, Audi மற்றும் Skoda வாகனங்களின் தரவுகளை அமேசான் கிளவுட் ஸ்டோரேஜில் பல மாதங்களாக பெறக் கூடிய நிலையில் இருந்துள்ளது.

460,000 வாகனங்களுக்கான துல்லியமான இருப்பிடத் தரவு பெறக் கூடியதாக இருந்தது.

இது சாரதி ஆசனத்திற்கு பின்னால் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்க அனுமதித்தது.

தற்போது தவறு சரி செய்யப்பட்டுள்ளதாக வொக்ஸ் வகன் குழுமம் அறிவித்துள்ளது.

கடவுச்சொற்கள் அல்லது கட்டண விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் பாதிக்கப்படவில்லை என்றும், , யாரும் தரவை அணுகவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஒன்லைன் சேவைகளுக்காக பதிவுசெய்யப்பட்ட மற்றும் ஒன்லைன் இணைப்பைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களின் தரவு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றரி மற்றும் சார்ஜிங் மென்பொருளை மேம்படுத்துவதற்காக சார்ஜிங் நடத்தை மற்றும் சார்ஜிங் பழக்கம் பற்றிய தரவுகளை உள்ளடக்கியது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

மூலம் -20 min.

Related Articles

Latest Articles