Valais கன்டோனில் உள்ள Veysonnaz இல், கேபிள் கார் ஒன்று நடுவழியில் நின்றதால் அதில் பயணம் செய்தவர்கள் அந்தரிக்கும் நிலை ஏற்பட்டது.
எட்டுப் பேர் அந்த கேபிள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து ஹெலிகொப்டர் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
2121 மீற்றர் உயரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கேபிள் கார் நடுவழியில் நின்றதற்கான சரியான காரணம் தெரியவரவில்லை.
மூலம் -20 min.