தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற விமானம், நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதாக தென்கொரிய செய்தி நிறுவனம் யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
Jeju Air நிறுவனத்தின் இந்த விமானத்தில் பயணித்த குறைந்தது 28 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பறவைக் கூட்டத்துடன் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் தரையிறங்குவதற்கான லான்டிங் கியர் செயலிழந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் பின்பகுதியில் இருந்து பயணிகளை வெளியேற்ற மீட்பு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் அருகில் காணப்படுகின்றன.
ஓடுபாதையின் விளிம்பில் விமானத்தின் வால் தீப்பிடித்து எரியும் ஒரு படம் வெளியாகியுள்ளது.
பிந்திய செய்தி.
இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தின் வால் பகுதிக்குள் இருந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு விமானப் பணியாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.