Tann மற்றும் Chommle (Gunzwil நகராட்சி) இடையே H23 பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை மாலை, சுமார் 8 மணியளவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
ஆரம்ப மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.
விபத்துக்கான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
எனினும் விபத்தின் போது, மிகவும் பனிமூட்டமாக இருந்தது மற்றும் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக இருந்தது, இதனால் வாகனம் ஓட்டுவது கடினமாக இருந்துள்ளது.
இந்த விபத்தினால் Schenkon மற்றும் Beromünster இடையேயான வீதி இரு திசைகளிலும் பல மணி நேரம் மூடப்பட்டது.
மூலம்- 20min.