Fribourg கன்டோனில் உள்ள Moléson-sur-Gruyères இன் ஸ்கை ரிசோர்ட்டில் இடம்பெற்ற விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
சனிக்கிழமை காலை11:30 மணியளவில், பனிச்சறுக்கு வீரர் “Itinéraire des Sommets” ஸ்கை பாதையில் விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
அவர் ஹெலிகொப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
Fribourg கன்டோனல் பொலிசார் அல்பைன் புலனாய்வாளர்களுடன் சேர்ந்து, விபத்துக்கான சரியான சூழ்நிலைகளை தெளிவுபடுத்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மூலம்- 20min.