அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்.
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், நேற்று ஜோர்ஜியாவில் காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜிம்மி கார்டர் தனது 100 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் மிக அதிக வயது வரை வாழ்ந்தவர் இவராவார்.
அவர் 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை வெள்ளை மாளிகையில் ஆட்சி செய்தார்.
2002 இல், அவரது மனிதாபிமான பணிக்காக, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.