15.8 C
New York
Thursday, September 11, 2025

சமரசம், பணிவை வலியுறுத்துகிறார் சுவிசின் புதிய ஜனாதிபதி.

2025 ஆம் ஆண்டிற்கான சுவிஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கரின் கெல்லர்-சுட்டர், தனது புத்தாண்டு உரையில் சுவிஸ் அரசியலில் சமரசம் மற்றும் பணிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

சுழற்சி முறையிலான சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதியாக  பதவியை ஏற்றுள்ள கெல்லர் சுட்டர், நிதி அமைச்சின்  தலைவராகவும் உள்ளார்.

சுவிட்சர்லாந்து ஒரு சமரச நாடு என்று கூறிய அவர்,   மற்றவர்களுக்கும் நியாயமான கவலைகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

61 வயதான கெல்லர்-சுட்டர் சுவிஸ் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் பத்தாவது பெண் ஆவார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles